13626 கரடிக்குட்டி தன்னைத்தானே பயமுறுத்திக்கொண்டது எப்படி?.

நி.ஸ்லத்கோவ் (ரஷ்ய மூலம்), பூ.சோமசுந்தரம் (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 29.5×20.5 சமீ.

காட்டில் வாழ்ந்த கரடிக்குட்டியொன்று காட்டுப் பழங்களைத் தின்னவேண்டும் என்ற அடங்காத ஆசையால் முதன்முதலாகக் காட்டுக்குள் பழச்செடிப் புதர்களை நோக்கி ஓடுகின்றது. நிசப்தமான கதகதப்பான அக்காலை வேளையில் கரடிக்குட்டியின் கால்பட்டு சுள்ளிகள் சடசடவென முறிந்து அப்பிரதசத்தின் அமைதியைக் குலைக்கின்றன. இச்சலசலப்பினால் காடு எச்சரிக்கை அடைகின்றது. காடைக்குஞ்சுகள் சத்தத்துக்குப் பயந்து ஒழிந்துகொள்கின்றன. பனிக்கீரி பாய்ந்து மரத்தில் ஏற, மரத்திலிருந்த பழமொன்று கீழேயுள்ள முயலின் தலையில் விழ, முயல் பயந்து துள்ளிக்குதித்தோடி மேலும் இரைச்சலை அதிகமாக்குகின்றது. இவ்வாறே மைனாக்கள், அண்டங்காக்கை, நரி, மான்குட்டி, ஓநாய்க்குட்டி, காட்டுப்பூனை, நாரைகள், வாத்துகள் என அனைத்தும் ஆளாளுக்கு அல்லோலகல்லோலப்பட, புதர்களிடையே தன்னைமறந்து பழங்களை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்த கரடிக் குட்டி, ஏன் எல்லா விலங்குகளும் தாறுமாறாக ஓடுகின்றன? ஏதோ பெரிய மிருகம் காட்டுக்குள் வந்துவிட்டதோ என அஞ்சி தனது வீட்டுக்குத் திரும்பி ஓடிப்போயிற்று. தான் உருவாக்கிய கலவரத்தை அறியாமல் தன்னைத் தானே பயமுறுத்திக்கொண்ட கரடிக்குட்டியின் கதை இது. இச்சிறுவர் கதை நூலுக்கான ஓவியங்களை யெ.சருஷின்; என்ற ரஷ்ய ஓவியர் வரைந்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

Super Minutes Shell out

Articles ‍‍ How do you Prevent To experience Slots?/a> Cresus: 200percent Around five-hundred, five hundred Free Spins To possess fifty Placed Igt Video game King

гринвей бады

Aviatrix bet Casino en ligne olympe Live-Casinos online Гринвей бады If you use a non-crypto banking method on your first OCG deposit, you can receive