13627 கலிவர் யாத்திரைகள்.

ஜொனதன் ஸ்விஃப்ட் (ஆங்கில மூலம்), ந.சி.கந்தையாபிள்ளை (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

48 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24×17.5 சமீ., ISBN: 978-955-1997-88-5.

ஜொனதன் ஸ்விஃப்ட் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். பாதிரியாராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் எழுத்தாளராக மாறியவர். கதை, கவிதை, நாவல் என்று பல்வேறு படைப்புகளை வழங்கியிருக்கிறார். அதில் கலிவரின் பயணங்கள் என்ற இந்த நாவல் மிக முக்கியமானதும் பிரபலமானதுமாகும். கதையின் நாயகனுக்கு கடல் பயணத்தின் மீது அளவற்ற ஆர்வம். ஒவ்வொரு பயணத்தின்போதும் ஏதாவது ஓர் ஆபத்தில் சிக்கி, புதிய தீவுகளுக்குச் சென்று சேர்கிறார். அந்தத் தீவுகளில் அவர் சந்திக்கும் பிரச்னைகள், விநோத மனிதர்கள், புதிய அனுபவங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட இந்த நாவல் அபாரமான கற்பனை. ஈழத் தமிழ் அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை (1893-1967) அவர்கள் 1959இல் தமிழ்மொழியில் ‘கலிவர் யாத்திரைகள்’ என்ற தலைப்பில் எழுதி சென்னையில் பிரசுரமாகியிருந்த இந்நூல் தற்போது, மீள்பதிப்பாக வெளிவந்துள்ளது. இந்நூலுக்கான சித்திரங்களை கௌசிகன் வரைந்துள்ளார். இந்நூல் 090ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. நூலின் உள்ளட்டையில் ஐளுடீN: 978-955-1997-55-7 எனவும், 057ஆவது இலக்கியன் வெளியீடு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Spin Online game Slots

Articles Rating 50percent As much as a lot of Basic Deposit Incentive Best Online casino Which have Real money Gambling games Can get 2024 Game