கவித் தென்றல் ஏரூர் (இயற்பெயர்: எம்.எச்.எம். ஹதாபி). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜுன் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
xx, 44 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43352-0-2.
எம்.எச் .எம். ஹதாபி என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் ஏரூர் எழுதிய 30 கவிதைகளை அடக்கியள்ள கவிதைத் தொகுப்பு இது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இவரது கவிதைகள் இலங்கை ஊடகங்களிலும் புகலிட ஊடகங்களிலும் முகநூலிலும் வெளியானவை. இவை தாய்மை, ஏழ்மை, சமூகம், காதல் போன்ற பல்வேறு விடயங்களைப் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. பாவம் எண்ட மகளாரு, அம்மா, ஒன்னையே நெனச்சு, அன்னை, என் தப்போது?, சொக்கி தவிக்கிறேன், ஷஹ்ருக்கு நேரமாச்சு, சீமையிலே, விலைமாதுவின் விந்தை, பூப்படைந்த மான், கூடலூரு குண்டுமல்லி என மிக எளிமையான நடையில் இவரது கவிதைகள் அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 252919).