கல்முனை எச்.ஏ.அஸீஸ். கல்முனை 5: எம்.எஸ். ஹமீத் வெளியீட்டகம், கமால் இல்லம், சாஹிபு வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2016. (கல்முனை: அன்-நூர் அச்சகம்).
xxiii, 152 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-3970-00-8.
1980களின் இறுதியிலிருந்து அவ்வப்போது கவிதைகளை எழுதிவந்துள்ள கவிஞர் எச்.ஏ.அஸீஸ் கல்முனையைச் சேர்ந்தவர். இவரது தந்தை சாஹூல் ஹமீத் இலங்கையில் உள்ளூர் அரசியல்வாதியாக இருந்தவர். எச்.ஏ.அஸீஸ் இலங்கை நிர்வாக சேவையிற் சேர்ந்து சிறிது காலம் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றி ராஜதந்திர சேவையில் இணைந்து கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஐந்து கண்டங்களிலும் இராஜதந்திரியாகப் பணியாற்றி தாயகம் மீண்டவர். வெளிநாடுகளில் தூதுவராகவும் பணிபுரிந்துள்ளார். தூதுவருக்குரிய ராஜதந்திரத்தையும் மீறி அவரிடம் காணப்படும் மனிதாபிமானம் இக்கவிதைகளின் வழியாக வந்து நம்மை வெகுவாகக் கவர்கிறது. என் மேசையில் பூகோளம், தீராத தாகம் என் தீவில், பட்டமேதும் பெற்றதுவா, மீசையை முறுக்கிவிடு, பழந்தரையில் எழும் புழுதி, கனவுகளின் உற்பத்திக்கூடம், நீண்ட தூரம் சென்ற போதும் என இன்னோரன்ன 73 கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60727).