ராஜாஜி ராஜகோபாலன். சிவகங்கை மாவட்டம்: வளரி எழுத்துக்கூடம், 32, கீழரத வீதி, மானாமதுரை 630606, 1வது பதிப்பு, 2014. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).
116 பக்கம், விலை: இந்திய ரூபா 75.00, அளவு: 21×14 சமீ.
ஈழத்தின் சமகால வாழ்வியலை வெளிப்படுத்தும் 34 கவிதைகள் இவை. சமுதாயப் படப்பிடிப்பும் நுணுக்கமான சமூகப் பார்வையும் கொண்ட இவரது கவிதைகள் யதார்த்தபூர்வமான பார்வையையும், நகையுணர்வுச் சுவையையும், அன்பையும் வெளிப்படுத்தி வாசகருக்கு உற்சாகமூட்டுவன. இந்நூலின் கவிதைகளுக்கான விரிவான திறனாய்வினை கே.எஸ்.சிவகுமாரன் வழங்கியுள்ளார். ஈழத்திலிருந்து எண்பதுகளில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர் ராஜாஜி ராஜகோபாலன். அங்கு சட்டத்தரணியாகப் பணியாற்றுகிறார். முன்னர் இலங்கையில் எழுபதுகளிலிருந்து எஸ்.ராஜகோபாலன் என்ற பெயரில் எழுதிவந்த இவரது கவிதைகள் மல்லிகை, அலை, வீரகேசரி, தினகரன் போன்ற ஊடகங்களில் வெளிவந்திருந்தன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 252475).