சோலைக்கிளி (இயற்பெயர்: உதுமாலெவ்வை முகம்மது அதீக்). கல்முனை: வாசல் மழை வெளியீடு, பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2017. (சாய்ந்தமருது: எக்ஸலன்ட் பிரின்ட்).
viii, 268 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-38330-1-3.
சோலைக்கிளி இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த ஒரு கவிஞர். 1980களிலே எழுதத் தொடங்கியவர். இருப்பு சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர். சோலைக்கிளியின் பதினொராவது கவிதைத் தொகுதி இதுவாகும். இந்த மண்ணிலே விளைந்து, இந்த மண்ணிலேயே பறந்து, இந்த மண்ணிலேயே முட்டையிடுகின்ற ஒரு மண்கோழியின் இன்னுமொரு கவிதைத் தொகுதியாக ‘மண்கோழியின்’ வரவு அமைந்துள்ளது. இந்த மண்ணைத் தோண்டித்தோண்டி தீன் எடுத்து, உலகத்தில் தூவிவிட எத்தனிப்பதுதான் இதன் வேலை. என்வீடு குடிகாரன், கறிமிளகாய், தேங்காய் பாதி, ஒன்றுக்கு ஒன்று எனத் தொடரும் இவரது 156 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.