கலைக்கோட்டன் அ. இருதயநாதன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
68 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4628-46-5.
நூலாசிரியர் இருதயநாதன் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர். மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் 08.05.1949இல் பிறந்த இவர் நாட்டுக்கூத்து, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றிலும் குறுந்திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இந்நூலில் இவர் எழுதிய சமூக நாடகங்களில் பாடசாலையைக் கதைக்களமாகக் கொண்ட ‘உணர்வுகள்’, திருமணப் பேச்சுகள், மாப்பிளை தேடும் படலம், சாதிப் பிரச்சினை என்று ஒரு நடுத்தர குடும்பஸ்தனின் தொல்லைகளை முன்வைத்து இன ஐக்கியம் பேசும் ‘குருதிகளின் குலம் ஒன்றே’ என்ற நாடகம், குடிகாரத்தந்தையின் பொறுப்பற்ற ஏழைக் குடும்பத்தில் வாழும் கெட்டிக்காரச்சிறுமியொருத்தி பற்றிய நாடகமான ‘கௌரவம்’, வைத்தியசாலைப் பின்னணியில் தனியார் வைத்தியசாலை, போதனா வைத்தியசாலை என்று ஒப்பீட்டில் நகர்த்தப்படும் ‘இரக்கம்’, சிங்கள வைத்தியரின் பெருந்தன்மையை மெச்சி விபரிக்கும் ‘கடையாணி’ என ஐந்து குறுநாடகங்களை இந்நூலில் காணமுடிகின்றது.