எஸ்.ரி.குமரன், எஸ்.ரி.அருள்குமரன். மல்லாகம்: புத்தாக்க அரங்க இயக்கம், கோயில் வீதி, 1வது பதிப்பு, கார்த்திகை 2016. (யாழ்ப்பாணம்: சி.கே.ஜே. பிரின்ட் கிராபிக்ஸ்).
(8), 60 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-43186-0-1.
விழிப்புணர்வூட்டும் தெருவெளி நாடகங்கள். போருக்குப் பின்னரான யாழ் மண்ணில் பண்பாட்டுத் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்திப்பதற்கு கைகொடுக்கின்றது பண்படு – தெருவெளி நாடகப் பிரதிகளின் தொகுப்பு நூல். சீர்மியக் கருத்துக்களை மக்களின் மத்தியில் எடுத்துரைப்பதற்கு கலை சிறந்த சாதனமாகும். இப்பணியில் நாடகக் கலைக்குத் தனியிடம் உள்ளது. இதில் தெருவெளி ஆற்றுகை ஒருபடி மேலோங்கி நிற்கின்றது. பாமர மக்களை நாடிச்சென்று, அவர்களுக்கான செய்திகளை, சிறந்த கருத்துக்களை விதைப்பதே அதற்குக் காரணம். அந்த வகையில், சமகாலச் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் வகையில் எழுதப்பட்ட பண்படு, வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான், நாளைய தலைவர்கள், வாழ்வதற்கு, கருகும் மொட்டுக்கள் ஆகிய ஐந்து நாடகங்களைத் தன்னுள் தாங்கியுள்ளது இந்நூல்.