13754 தஞ்சம்.

க.சட்டநாதன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2018. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).

viii, 140 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-06-1.

முளையான், உறையும் உணர்வுகள், தலை தாழ, அசைவுகள், வதம், கலங்கல், பேதம், சின்னதாய் விரியும், தஞ்சம், மீண்டும் அந்த கிராமத்து மண்ணில் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்துச் சிறுகதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. கதைகளில் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லையும் கலைத்துவமாகப் பயன்படுத்துவதில் இப்படைப்பாளியின் இடம் தனித்துவமானது. சிறுவர்களை மையப்படுத்தியும், ஆண்-பெண் உறவு, மெல்லிய காதல் உணர்வு, போருடனான வாழ்வு, மனித வாழ்வின் அழகினை ஆராதிக்கின்ற, திசைதோறும் ஒளிர்கின்ற, இனிமையும் மேன்மையும் கொண்ட மனிதப் பண்புகளைச் சுட்டிக்காட்டுகின்ற படைப்பாளியாக திரு.க.சட்டநாதன் கருதப்படுகிறார்.  இது ஜீவநதியின் 97ஆவது வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்

16525 குறளின் குரல்.

பா.சிவபாலன். யாழ்ப்பாணம்: பா.சிவபாலன், 214/4 C, இராமநாதன் வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (திருக்கோணமலை: ரெயின்போ மினிலாப், 361, நீதிமன்ற வீதி). 140 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 18.5×13.5