உடுவில் அரவிந்தன். யாழ்ப்பாணம்: உடவில் அரவிந்தன், மயிலியதனை, தொண்டைமானாறு, 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).
viii, 112 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-955-38336-0-0.
உடுவில் அரவிந்தன் எழுதிய அடையாளம், இருப்பு, இரை, ஈச்சம்பழம், உயிர்ப்பு, ஊருணி, கல்லறைப் பூக்கள், கூடு, சுடலைக் குருவி, நிலா, பயணம், பாழ்வெளி, பேய்வளவு, மீளுதல், முள் ஆகிய சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. உடுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட அப்புத்துரை அரவிந்தன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். சஞ்சீவி இலக்கியக் களத்தில் முகிழ்ந்த இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான ‘உணர்வுகள்’ நூலை 1999இல் வெளியிட்டிருந்தார். பாழ்வெளியில் வெளிவந்துள்ள சிறுகதைகள், தினக்குரல், சுடரொளி, வெளிச்சம், கலைமுகம், ஆதவன், உள்ளம், மகுடம், புதுவிதி, தீராநதி, தளவாசல், தமிழ்நாதம் ஆகிய ஊடகங்களில் முன்னர் பிரசுரமானவை. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24949).