13902 அம்பிகைபாகன் ஆளுமைத்தடம்.

முருகேசு கௌரிகாந்தன். மல்லாகம்: முருகேசு கௌரிகாந்தன், மணிமனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், திருநெல்வேலி).

vi, 78 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-54841-0-7.

யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அம்பிகைபாகன் பற்றி யாழ். கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் முருகேசு கௌரிகாந்தன் எழுதிய இந்நூல், அம்பிகைபாகன் அவர்களது துணைவியார் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகனின் 90ஆவது பிறந்த நாள் விழா அக்டோபர் 19, 2012 அன்று யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் மகேந்திரம் தலைமையில் நடைபெற்றபோது வெளியிடப்பட்டது. இந் நூலில் திரு.அம்பிகைபாகன் அவர்கள் ஆற்றிய எழுத்துலக, சமய, பதிப்பு , கல்வி மற்றும் நிர்வாகப் பணிகள் மற்றும் அவரது வரலாறு பற்றிய விபரங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. மேலும் அவரது ஆளுமையினை நன்கு புரிந்துகொண்ட தமிழகஃஈழத்து அறிஞர்கள் பலரின் அவர் பற்றிய மனப்பதிவுகளும் இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. நூலின் பின் இணைப்பாகத் திருமதி நகுலாம்பிகை அம்பிகைபாகன் பற்றிய குறிப்புகளும், அம்பிகைபாகன் அவர்களது வாழ்வினை வெளிப்படுத்தும் நிழற்படங்களும், வாழ்த்துரைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. முன்னுரை, அம்பிகைபாகனார் உறவு, அம்பிகைபாகனாரின் கல்வி நிர்வாகப் பணிகள், அம்பிகைபாகனாரின் எழுத்தாக்கப் பணிகள், அம்பிகைபாகனாரின் பதிப்புப் பணி, அம்பிகைபாகனாரின் சமயப் பணிகள், அம்பிகைபாகனாரின் பொதுப்பணிகள், அம்பிகைபாகனாருடன் தொடர்புள்ள முக்கியஸ்தர்கள், அம்பிகைபாகனாரின் குடும்ப விசாலமும் கல்வியும், நன்றிக் குறிப்பு, பின்னிணைப்பு ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51642).

ஏனைய பதிவுகள்

Starburst by the NetEnt

Blogs What type of mobile device must play the games? Starburst Position RTP and you will Volatility Starburst Opinion The new reels are set inside