13907 நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும்: அமரர் எல்.ஏ.யோசப் நினைவுமலர்-2018.

மலர்க் குழு. மாதகல்: அமரர் எல்.ஏ.யோசப் நூற்றாண்டு நினைவுக் குழு, ஆவணி 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

94 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

மாதகல் கிராமம் தந்த நல்லாசான் எல்.ஏ.யோசப்பின் பிறந்தநாள் நூற்றாண்டு வெளியீடாக அவர் பற்றிய மலரும் நினைவுகளுடன் இப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. ‘எல்.ஏ.மாஸ்டர்’ என அழைக்கப்பட்ட லோப்புப்பிள்ளை அமிர்தநாதர் யோசப் ‘வரகவி’ அமிர்தநாதர்-செல்வம் தம்பதிகளின் இளைய புதல்வராக 9.7.1917இல் பிறந்தார். இவர் ஆங்கில மொழியையும் விளையாட்டுத் துறைசார் நுட்பங்களையும் மிகுந்த ஈடுபாட்டோடும் கட்டுப்பாட்டுடனும் கற்பித்த நல்லாசான். தனது ஆரம்பக்கல்வியை மாதகல் புனித சூசையப்பர் ஆங்கிலப் பாடசாலையிலும் பின்னர் புலமைப்பரிசில் பெற்று யாழ்.புனித சம்பத்திரிசியார் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் தனது கல்வியை இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியில் தொடர்ந்ததுடன், கல்லூரியின் துடுப்பாட்ட, உதைபந்தாட்ட, கரப்பந்தாட்ட அணிகளுக்கு தலைமை தாங்கி சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதினையும் பெற்றார். இரண்டாவது உலக மகா யுத்த காலத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் கூட்டுறவு இயக்கத்தை அப்பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தி அரும்பணியாற்றிய பெருமையும் இவருக்குண்டு. இவர் 1950 இல் தனது ஆசிரிய பணியை இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரியில் ஆரம்பித்து மஹரகம ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று முதலாம் தர ஆங்கில ஆசிரியரானார். மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை, மாதகல் புனித சூசையப்பர் மகா வித்தியாலயம், அளவெட்டி அருணோதயா கல்லூரி என்பவற்றில் ஆங்கில ஆசிரியராகவும் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுத்துறை ஆசிரியராகவும் அரும்பணியாற்றினார். சிறந்த ஆங்கிலப் பேச்சாளராகத் திகழ்ந்த இவர் நாடக நடிகராகவும் ஓவியராகவும் திகழ்ந்ததுடன், சிறந்த சமூக சேவையாளராகவும் பொது நீதிக்குப் போராடியவராகவும் திகழ்ந்தார். தனது ஆசிரியப் பணியிலிருந்து 1975 ஆம் வருடத்தில் இளைப்பாறியபின் 1988 ஆம் வருடம் முதல் கொழும்பு நகரில் வாழ்ந்தவர். தனது 91ஆவது வயதில் 25.8.2008இல் கல்கிஸ்ஸையில் மரணமானார்.

ஏனைய பதிவுகள்

Fantasia 2000 opinion

The site shows up that have most technical motivated application that renders the fresh routing and you may program phenomenal. Professionals does not discover almost