13909 பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம்: கல்விச் சிந்தனைகளும் பணிகளும்.

சி.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்). மண்டூர்: கலை இலக்கிய அவை, 1வது பதிப்பு, 2018. (மட்டக்களப்பு: வனசிங்கா அச்சகம், திருமலை வீதி).

vi, 54 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7202-02-0.

கிழக்கிலங்கையில் மண்டூர் எனும் கிராமத்தில் பிறந்த பேராசிரியர் பத்தக்குட்டி சந்திரசேகரம் (17.7.1926-12.11.1987) சிவாநந்த வித்தியாலயத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் சுவாமி விபுலானந்தரிடம் படித்தவர். பல்கலைக் கழகப் பட்டம்பெற்று சிவாநந்த வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன்பின் கல்வி டிப்ளோமா பட்டம் பெற்று மீண்டும் சிவாநந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகி புலமைப் பரிசில் பெற்று மேற்படிப்புக்கு இந்தியா சென்றார். பின் யாழ்ப்பாணத்தில் கந்தரோடையில் உள்ள ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி அங்கிருந்து லண்டன் சென்று லண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமானிப் பட்டம் பெற்றார். மீண்டும் வந்து ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றும் போது பேராதனைப் பல்கலைக் கழகத்தில் கல்விப் பீடத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். அங்கிருந்து கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கல்விப் பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றினார். அங்கிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மாற்றப்பட்டு அங்கு முதலாவது கல்விப் பேராசிரியராக பணியாற்றினார். 1987 வடபுலப்   போர்ச்சூழலில் அகால மரணமடைந்தார். பேராசிரியரின் கல்விச் சிந்தனைகளும் பணிகளும் பற்றிய  கோணாமலை கோணேசபிள்ளை, மா.கணபதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி, சி.மௌனகுரு, சோ.சந்திரசேகரன், செ.யோகராசா, சி.சந்திரசேகரம் ஆகியோரின் மதிப்பீடாக இத்தொகுப்பு அமைந்துள்ளது. இறுதிக் கட்டுரையாக ‘விபுலாநந்த அடிகளாரின் கல்விச் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் சபா ஜெயராசா அவர்கள் எழுதிய கட்டுரை இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062860).

ஏனைய பதிவுகள்

United states Casinos on the internet

Articles Just what Extra Also provides Can i Allege At the Better Online casinos Inside India? Games Sum Rates Are Black-jack Purely Fortune, Otherwise Can

12155 – தேவார திருவாசகத் திரட்டு: உரையுடன்.

ம.வே.திருஞானசம்பந்தப் பிள்ளை (பொழிப்புரை, தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவ பரிபாலன சபை, 3வது பதிப்பு, 1954, 1வது பதிப்பு, விகிர்தி வருடம் 1950. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை). (4), 68 பக்கம், விலை: 65 சதம்,