13917 விந்தைகள் புரிந்த விஞ்ஞானிகள் பாகம் 1.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23-3/3, அரத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2013. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L. 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

150 பக்கங்கள், புகைப்படங்கள், ரூபா 200., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1162-52-8.

மனிதகுலத்தின் நன்மைக்காகத் தங்களையே அர்ப்பணித்துத் தொண்டாற்றியஅறிவியல் மேதைகளை இன்றைய இளம் சந்ததியினர் நன்கு அறிந்திட வேண்டும், புதியன காண முயன்றிட வேண்டும் என்னும் நோக்குடன் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. மருத்துவம், கணிதம், கதிரியக்கம், வானியல், அணுவியல், தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து, எனப் பல்வேறு துறைகளிலும் சாதனை படைத்த 40 விஞ்ஞானிகளை இந்நூல் அறிமுகம் செய்கின்றது. அவ்வகையில், ஹிப்போகிரேட்ஸ், ஆர்க்கிமிடீஸ், கலிலியோ, நிக்கலஸ் கொப்பர்நிக்கஸ், வில்லியம் ஹார்வி, லூயிஸ் பாஸ்டர், மார்க்கோனி, ஜேம்ஸ் வாட், சேர்.ஐசாக் நியூட்டன், பெஞ்சமின் பிராங்க்ளின், அல்பிரெட் நோபல், தோமஸ் அல்வா எடிசன், மைக்கேல் ஃபாரடே, அல்பேர்ட் ஐன்ஸ்டீன், வில்ஹெம் ராண்ட் ஜென், சேர். அலெக்சாண்டர் பிளெமிங், எட்வர்ட் ஜென்னர், மேரி கியூரி, ஐரீன் ஜுலியட் கியூரி, சேர்.சி.வி.இராமன், ரூடால்ப் டீசல், அலெக்சாண்டர் கிரஹம் பெல், ஆர்தர் ஸ்ரான்லி எடிங்டன், ஏர்னஸ்ட் ரூதர் போர்ட், ஜோன் லோகி பெயர்ட், சேர். ஜெகதீஸ் சந்திரபோஸ், வில்லெம் எய்ன்தோவன், ரொபேர்ட் ஹ{க், பொரெஸ்ட் பேர்ட், ஜேம்ஸ் சேட்விக், அப்துல் கலாம், லீவன் ஹ{க், ஹென்றிக் ஹெர்ட்ஸ், லியனார்டோ டாவின்சி, நில்ஸ் போர், கென்றி ஃபோர்ட், அல்பேர்ட் ஆபிரஹாம் மைக்கேல்சன், சேர் ஹம்ப்ரி டேவி, ஹெர்பர்ட் ஒஸ்ரின், சுப்பிரமணியம் சந்திரசேகர் ஆகியோர் பற்றிய வாழ்வும் பணிகளும் இங்கு சிறியவர்களும் படித்து உணரும்வகையில் எளிய தமிழ்நடையில் எழுதப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர், கலாபூஷணம், கவிஞர் த.துரைசிங்கம் அவர்கள் கடந்த ஆறு தசாப்தகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருபவர்.

ஏனைய பதிவுகள்

Parti

Content Ansvarsfullt Spelande På En Casino Inte med Spelpaus Casino Tillsammans Flink Utbetalning Sam Att Testa Tillsammans På rak arm & Rapp Uttag Orsaker Till

12346 – இளங்கதிர்:இதழ் 1 மலர் 6 (1953-1954).

சி.வெங்கடேச சர்மா (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1954. (கண்டி: அருணா பிரஸ், இல. 42, ஹில் ஸ்ட்ரீட்). 370.05 கல்விநிறுவனங்களின் ஆய்விதழ்கள், ஆண்டு மலர்கள்190 நூல் தேட்டம் –