13992 சுவாமி விபுலானந்தர்.

பெ.சு.மணி. சென்னை 600 001: மணிவாசகர் பதிப்பகம், 55 லிங்கித் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 1992. (சென்னை 600 094: கோகிலாஸ்ரீ பிரின்டர்ஸ்).

xvi, 120 பக்கம், விலை: இந்திய ரூபா 15.00, அளவு: 18×12 சமீ.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா வெளியீடாக டாக்டர் ச.மெய்யப்பன் அவர்களின் வடிவாக்கத்தில் இந்நூல் தமிழகத்தில் வெளிவந்தது. இலங்கையில் 1892ஆம் ஆண்டு பிறந்த சுவாமி விபுலானந்தர் 1922ஆம் ஆண்டு சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்களுள் பலரைத் தரிசிக்கும் பேறுபெற்ற அவர், அவர்களுள் ஒருவரான சுவாமி சிவானந்தரிடமிருந்து சந்நியாச தீட்சை பெற்று சுவாமி விபுலானந்தர் ஆனார். இந்நூலில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத் தலைவர் சுவாமி ஸ்மரணானந்தஜி மகராஜ் அவர்களின் முன்னுரையுடன் இராமகிருஷ்ணா இயக்கத்தின் தோற்றம், இலங்கை இந்து சமயத்தில் சுவாமி விவேகானந்தரின் தாக்கம், இராமகிருஷ்ணர் இயக்கத்தில் சுவாமி விபுலானந்தர், சுவாமி விபுலானந்தர் நோக்கில் மகாகவி பாரதியார் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற நான்கு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பின்னிணைப்புகளாக, யாழ் நூல் ஆய்வு குறித்து சுவாமி விபுலானந்தர் கருத்து, ‘இமயத்தைச் சேர்ந்த காக்கை’ என்ற  சுவாமி விபுலானந்தரின் கட்டுரை, சுவாமி விபுலானந்தரின் வாழ்க்கைக் குறிப்பு ஆகிய மூன்று ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13144).

ஏனைய பதிவுகள்