ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர். யாழ்ப்பாணம்: சண்முகநாதன் புத்தகசாலை, 1வது பதிப்பு, 1953. (யாழ்ப்பாணம்: சண்முகநாதன் அச்சகம்).
58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13 x 10.5 சமீ.
கேள்வி-பதில்களின் வடிவில் பாமரருக்கும் சைவ சமய தத்துவங்களை எளியமுறையில் பரப்புவதில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் சைவ-வினாவிடை அந்நாளில் வெற்றிகண்டிருந்தது. இன்றளவில் சைவசமயம் கற்போருக்கான விருப்பு நூலாக இது இருந்து வருகின்றது. தோத்திரத் திரட்டுடன் கூடியதாக இம்மீள்பதிப்பு பாடசாலை மாணவர்களின் உபபாட நூலாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2755. பின்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9182).