ச.குமாரசுவாமிக் குருக்கள். யாழ்ப்பாணம்: ச.கு.வைத்தியேசுவரக் குருக்கள், அச்சுவேலி, 9வது பதிப்பு, ஆனி 1954, 7வது பதிப்பு, நந்தன வருடம் தை 1953, 1வது பதிப்பு, மார்ச் 1933. (பருத்தித்துறை: சிவஸ்ரீ வைத்தீசுவரக் குருக்கள், கலாநிதியந்திரசாலை).
(4), 48 பக்கம், படங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 21 x 13.5 சமீ.
அச்சுவேலி சரசுவதி வித்தியாசாலை மனேசரான சிவஸ்ரீ ச.குமாரசுவாமிக் குருக்கள், சிவனடியார் பெருமைகளையும், சிவதலங்களின் பெருமையையும், சைவசமயக் கருத்துக்களை உள்ளடக்கிய உபகதைகளையும் எளிய நடையில் இளையோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் சுவையாக எழுதி சைவப்பிரகாசிகை என்ற தொடர்நூல் வழியாக அவ்வப்போது வழங்கிவந்துள்ளார். அவ்வகையில் வெளிவந்துள்ள ஐந்தாம் புத்தகம் இதுவாகும். விநாயகக் கடவுள், நம்பியாண்டார் நம்பி, சிவபெருமான், விட்டுணு பிரமர் அடிமுடி தேடியது, உமாதேவியார், சுப்பிரமணியக் கடவுள், சிவதூஷணம், வீரபத்திரக் கடவுள் சர்பவடிவம் கொண்டது, வைரவக் கடவுள், தவம், அன்புடைமை, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் ஞானப்பாலுண்டது, பாண்டியன் சுரந்தீர்த்தது, அப்பூதியடிகள் நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் முதலைவாய்ப்பட்ட பிள்ளையை மீட்டது, மாணிக்கவாசக சுவாமிகள் புத்தரை வாதில் வென்றது, மெய்கண்ட தேவர், உமாபதி சிவாசாரியார், கோச்செங்கட் சோழநாயனார், மனுநீதிகண்ட சோழர், ஆலய வழிபாடு, சிவாலயத் திருத்தொண்டுகள், திருவிளக்கிடுதல் சிவநின்மாலியம், சிவத்திரவியங் கவர்தல், குருசங்கம வழிபாடு, நக்கீரர், சுப்பிரமணியக் கடவுளும் ஒளவையாரும், முசுகுந்தச் சக்கரவர்த்தி, கரிக்குருவி உபதேசம்பெற்றது, விட்டுணு, சைவாசாரியரும் வைணவனும், சண்டேசுர நாயனார் ஆகிய தலைப்புகளில் இக் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2951. முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 9185)