இலண்டன் IG1 9RY: MurasamPublications Limited, P.O.Box 2203, Ilford,11வது பதிப்பு, 2018. (இலண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).
418 பக்கம், வண்ணத் தகடுகள், விலை: இலவசம், அளவு: 21 x 15 சமீ.
பிரித்தானியாவில் வெளியாகும் வர்த்தக வழிகாட்டி. பயனுள்ள பிரித்தானிய தொலைபேசி இலக்கங்கள், மற்றும் பல்வேறு உசாத்துணைத் தகவல்களுடன் 2002 முதல் ஆண்டுதோறும் வெளிவரும் வழிகாட்டி. வர்த்தகத் துறைகள் அகரவரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. புகலிடத்தில் குறுகிய காலத்தில் தொழில், வர்த்தகம், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்மக்கள் காட்டிவருகின்ற ஈடுபாடும், கடின உழைப்பும் திறமையும் வெற்றியும் ஒவ்வொரு பக்கங்களிலும் விரவிக்கிடக்கின்றன. தகவல் பகுதி, அகரவரிசை தொகுப்பு, தகவல் பகுதி-2, அகரவரிசை பொருளடக்கம் ஆகிய நான்கு பிரிவுகளின்கீழ் தகவல்கள் வகுக்கப்பட்டுள்ளன.(முன்னைய பதிவிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 1028