குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், பவளராணி கனகரத்தினம். கண்டி: குரும்பசிட்டி இரா.கனகரத்தினம், ஹெட்டியாவத்தை, முல்கம்பொலை, 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை). 26 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22X14 சமீ. உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் கண்டியில் இலங்கைத் தமிழர் தொடர்பான பல்வேறு ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் ஒர் ஆவணக் காப்பகமாக உருவாக்கப்பட்டிருந்தது. இது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அணுக்கத் தொண்டராகவிருந்த குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் அவர்களின் 45 ஆண்டுப் பணியால் உருவாக்கப்பட்ட ஆவணக் காப்பகம் ஆகும். குறிப்பாக இந்த ஆவணக் காப்பகத்தில் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாறு திரட்டப்பட்டிருந்தது. இதில் ஒரு பகுதி ஆவணங்கள் மைக்ரோ பிலிம்களாக (200) யுனெஸ்கோ நிறுவனத்தின் உதவியுடன் சுவிற்சர்லாந்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகை இன்னும் மைக்ரோ பிலிம்களாக பதிவுசெய்யப்பட வேண்டியிருந்தன. இது கண்டியில் நிலவிய பாதுகாப்பின்மையால் 2000களில் கிளிநொச்சிக்கு இடம்பெயர்ந்தது. இலங்கைப் படையினரால் கிளிநொச்சி அழிக்கப்பட்டபோது இந்த ஆவணக்காப்பகமும் அழிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24858).
Entropay Casinos, Finest Entropay Accepting Online slots games
Posts Greatest Entropay Local casino On the web Simple tips to Deposit Double up with Joe Fortune’s Informal Put Incentive Among the better gambling enterprises