14009 தமிழர் தகவல் 2000. ஒன்பதாவது ஆண்டு மலர் (மிலேனியம் மலர்).

எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்). கனடா: அகிலன் அசோஷியேட்ஸ், P.O.Box 3,Station F,Toronto, 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (Canada, Ahilan Associates, Printters and Publishers,Toronto). 158 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21 சமீ., ISBN: 1206-0585 கனேடியத் தமிழ் மக்களின் நடவடிக்கைகள், பிரச்சினைகள், தீர்வுகள், வளர்ச்சிகள், அத்தகைய வளர்ச்சிக்காக உழைக்கும் பெரியார்கள் தொடர்பான பல தகவல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என்பனவற்றைத் தாங்கி பெப்ரவரி 1991 முதல் வெளிவரும் மாதாந்த சஞ்சிகையின் ஒன்பதாவது ஆண்டு மலர் இது. இவ்விதழின் பிரதம ஆசிரியர் எஸ். திருச்செல்வம் இலங்கையின் ஒரு சிறந்த ஊடகவியலாளர், அரசியல் ஆய்வாளர், இலக்கிய விமர்சகர், தேசிய செயற்பாட்டாளர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர். தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25212).

ஏனைய பதிவுகள்