எஸ்.திருச்செல்வம் (பிரதம ஆசிரியர்), Canada: Tamil’s Information, Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (Canada: Tamil’s Information, Ahilan Associates, Printer and publisher ,P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4). 172 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21.5 சமீ., ISBN:1206-0585. பெப்ரவரி 1991 முதல் கனடாவிலிருந்து வெளிவரும் தமிழர் தகவல் மாத சஞ்சிகையின் 29ஆவது ஆண்டு நிறைவு மலர். அமெரிக்க, கனடியத் தமிழ் மக்களினதும், ஐரோப்பியத் தமிழர்களினதும் 100க்கும் மேற்பட்ட அறிவியல் ஆக்கங்களைத் தாங்கி இது வெளிவந்துள்ளது. தமிழர் தகவல் ஆண்டுதோறும் வழங்கும் விருதுகளைப் பெறுவோர் பற்றிய விபரங்களும் இம்மலரில் முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளன. 09 பெப்ரவரி 2020 அன்று கனடாவின் ரொரன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா மண்டபத்தில் இடம்பெற்ற ஆண்டு விழாவின்போது இம்மலர் வெளியிடப்பட்டது.