மலர்க்குழு. ஜேர்மனி: புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம், என்னப்பெற்றால், 1வது பதிப்பு, 2018. யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). 117 பக்கம், வண்ணப்படங்கள், விலை: அன்பளிப்பு, அளவு: 29X20.5 சமீ. புங்குடுதீவு தொண்டர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியம் ஜேர்மனியில் என்னெப்பெற்றால் பிரதேசத்தில் 30.09.2017 அன்று நடத்திய கிராமிய பூபாளம் கலைமாலைப்பொழுது நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். மேற்படி நற்பணி ஒன்றியத்தினதும், புங்குடுதீவு சர்வோதய இயக்கத்தினதும் பல்வேறு தாயகப் பணிகள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய நிகழ்வு அறிக்கைகளுடன், ஆசியுரைகள், கட்டுரைகள் என்பனவும், கடந்த ஆண்டு நடைபெற்ற கிராமிய பூபாளம் 2017 நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பும் இடம்பெற்றுள்ளன. இம்மலர்க்குழுவில் கணேசு மகாலிங்கம், ஜெயந்தி கேதீஸ்வரன், பொன்னம்பலம் ஜமுனாதேவி, கிருஷ்ணமூர்த்தி மனோரதி ஆகியோர் பங்காற்றியுள்ளனர்.