14024 உள்ளத்துள் உறைதல்.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, மே 2011. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை). x, 168 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21 x 14.5 சமீ. உளவியல் சரிதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள இந்நூலில் 40 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. நமது வாழ்வில் எதிர்கொள்ளும் சம்பவங்கள், நமது உள்ளத்தில் ஏற்படுத்தும் குமைச்சல்கள் நமது உளவளத்தை பாதிப்படையச் செய்கின்றன. அவற்றிலிருந்து விடுபடும்வகையில் வழங்கும் ஆலோசனைகளாக இதிலுள்ள ஆக்கங்களை காணமுடிகின்றது. ஒரு உளவளத்துணையாளராக நின்று, சீர்மிய உளவியல், தனிமனித சமூகப் புலங்களை ஊடறுத்துத் தெளிவான சிந்தனைகளையும், மனப்பாங்குகளையும், மாற்றங்களையும், உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இதிலுள்ள 40 கட்டுரைகளும் எழுதப்பட்டுள்ளன. கோகிலா மகேந்திரன் ஆசிரியர், அதிபர், கல்வி நிர்வாகி எனக் கல்விப் பரப்பில் பல்வேறு நிலைகளில் தனது பணிகளை நிறைவுடன் மேற்கொண்டவர். வலிகாமம் கல்வி வலயத்தின் ஓய்வுநிலைப் பிரதிக் கல்விப் பணிப்பாளர். கலை இலக்கியத்தளத்தில் சிறுகதையாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், விமர்சகர், கட்டுரையாளர் எனப் பன்முக ஆளுமையுடன் கனதியாக இயங்குபவர். சீர்மிய உளவியல் துறையில் தொடர்ந்து ஆழமான கற்கையும் தேடலும் உள்ளவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50862).

ஏனைய பதிவுகள்

14457 இயற்கை வளங்கள் தொடர்பான இரசாயனவியல்.

A.மகாதேவன். தெல்லிப்பழை: P.ஆறுமுகம், இரசாயனவியற் கழகம், குரும்பசிட்டி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (ஏழாலை: மகாத்மா அச்சகம்). (2), 52 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 10.00, அளவு: 21.5×14 சமீ. இயற்கை