14042 உமாபதி சிவாசாரியார் ; அருளிச் செய்த திருவருட்பயன் ;

உமாபதி சிவாசாரியார் (மூலம்), சு.சிவபாதசுந்தரம் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவபரிபாலன சபை, 12வது பதிப்பு, ஜனவரி 1980. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சகம்). iv, 134 பக்கம், விலை: ரூபா 6.75, அளவு: 18×11.5 சமீ. சைவ சித்தாந்தத்தை தமிழில் கற்றிட முனைவோருக்கென உரைநடையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில் பதிமுதுநிலை, உயிரவை நிலை, இருண்மல நிலை, அருளது நிலை, அருளுரு நெறி, அறியுநெறி, உயிர் விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருணிலை, அணைந்தோர் தன்மை ஆகிய தலைப்புகளில் திருவருட்பயன் விளக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள பதவுரை நிரம்பவழகிய தேசிகரின் பொழிப்புரையைத் தழுவியும், விசேடவுரை சிவஞானபோதம், சிவஞானசித்தியார் முதலிய சித்தாந்த சாத்திரங்களையும் அவற்றின் பேருரைகளையும் துணையாகக் கொண்டும் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24055).

ஏனைய பதிவுகள்