சி.அருணாசலம் சுவாமிகள் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: கிருஷ்ணானந்த சிவம், ஸ்ரீ சிவகுருநாத அறக்கட்டளை, 33-5/1, ருத்திரா மாவத்தை, 2வது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 1983. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). 98 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ. சிவஞான தேசிகன் என்ற இச்சிறுநூலில் வேதாந்தக் கருத்துக்கள், திருமந்திரம், விவேகசூடாமணி, ரிபுகீதை, தாயுமான சுவாமிகள் பாடல்கள் என்பவை மூலம் பிரபல ஞானிகளால் திருவாய் மலர்ந்தருளப்பட்ட பாக்கள் தொகுத்து உரைநடையுடன் தரப்பட்டுள்ளன. சாவகச்சேரியைச் சேர்ந்த சி.அருளம்பலம் சுவாமிகள் 1983இல் முதலில் பிரசுரித்திருந்த இந்நூல் மீண்டும் 2019அம் ஆண்டு ஸ்ரீ சிவகுருநாத அறக்கட்டளை மூலம் மீள்பிரசுரம் காண்கிறது. ஸ்ரீமத் சி.அருணாசலம் சுவாமிகள் ஸ்ரீ சிவகுருநாத பீட தாபகரும், ஸ்ரீமத் மகாதேவ சுவாமிகளின் மாணவரும், ஆத்மாத்ம அந்தரங்க வழித் தாபகரும், கொழும்பு ஆண்டவர் ஸ்ரீ தாளையான் சுவாமிகளின் சீடருமாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64911).
14197 சுவிஸ்-பேர்ண் ஞானலிங்கேச்சரர் திருப்பள்ளியெழுச்சி.ச.வே.பஞ்சாட்சரம்.
சுவிட்சர்லாந்து: செங்கோடன் பஞ்சாட்சரம், சூரிச், 1வது பதிப்பு, ஆடி 2019. (Canada: Silver Print House, 5030, Heatherleigh Ave Unit No. 60, Mississauga, Ontario, L5V 2G7). 8 பக்கம், விலை: