என்.ராஜமணி. கொழும்பு 11: அஷ்டலஷ்மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 11: அஷ்டல~;மி பதிப்பகம், 320, செட்டியார் தெரு). vii, 72 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 28×21 சமீ. இந்து மதத்தில் திருமணத்தின் போது ஆண், பெண் இருவருக்கும் அவர்கள் பிறந்த நட்சத்திரம், ராசி போன்றவைகளைக் கொண்டு பன்னிரண்டு வகையான பொருத்தங்கள் பார்க்கப்படுகிறன. இவற்றில் குறிப்பிட்ட பொருத்தங்கள் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இல்லையென்றால் ஜாதகப் பொருத்தமில்லை என்று அந்தத் திருமணம் தவிர்க்கப்படுகிறது. சில பொருத்தங்கள் இல்லை என்றாகிவிடும். இந்நூலில் பொருத்த விதிகள், திருமண நாள் வைத்தல் ஆகியவை அடங்கலாக திருமணப் பொருத்தம் எளிதாக எவ்வாறு கணிப்பது என்று விளக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் என்.ராஜமணி, தமிழ்நாடு, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சோதிடராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 31832).