14049 பலன்தரும் பெயர் சூட்டுவோம்.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சடையாளி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: சப்தமி ஓப்செட் பிறின்டர்ஸ், நல்லூர்). viii, (2), 63 பக்கம், விலை: ரூபா 200.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-38483-7-6. ஒருவரின் பெயரிலேயே வாழ்வில் அவர் அடையும் உயர்ச்சியும் தாழ்ச்சியும் தங்கியுள்ளதெனக் கூறும் இந்நூலாசிரியர், வாழ்வியல் குறைபாட்டிற்கு மாற்றீடாக பெயர் மாற்றம் அல்லது பெயரில் எழுத்தைக் கூட்டவோ குறைக்கவோ தான் எண் சோதிடம் வழியைக் கூறுகின்றது என்கிறார். தனது கணிப்பின்படி, மாற்றீடாக ஒருவரது பிறந்த நட்சத்திரத்தின் முதல் எழுத்தை முதலில் அனுசரித்து அதனோடு இணைந்த ஒலி அதிர்வு எழுத்துக்களை கவனத்தில் கொண்டு ஒரு குழந்தையின் பெயரை தெரிவுசெய்து வைக்கவேண்டும் என்கிறார். இவர் தனது கண்டுபிடிப்பினை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் முறை, ஒலி அதிர்வு சோதிடம், இருபத்தேழு நட்சத்திரங்களுக்குமுரிய முதல் எழுத்துக்கள், பிறந்த இராசிக்குரிய பெயரின் முதல் எழுத்து, தமிழ் முதல் எழுத்துக்களின் பெயர் ஓசைப் பலன்கள், பெயர் மாற்றம் செய்யலாமா?, பெயர் வசியம், நட்சத்திர முதல் எழுத்துக்கு நிகரான தமிழ் ஓசை எழுத்துக்கள், எண் சோதிடத்தில் பெயர், வீட்டுக்குப் பெயர் வைத்தல், கையெழுத்து தலையெழுத்தை மாற்றுமா?, கருத்துள்ள பலன் தரும் தமிழ்ப் பெயர்கள் ஆகிய பன்னிரண்டு இயல்களில் விளக்கியிருக்கிறார்.

ஏனைய பதிவுகள்