ச.ஏகாம்பரநாதன். கொழும்பு 6: ச.ஏகாம்பரநாதன், இல. 8, ரஞ்சன் வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6), 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. சைவசமயத்தினர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்கங்கள் பற்றிய தகவல்களைத் தாங்கிவரும் இந்நூல் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதற் பகுதியில் அறிமுகம், இரு முக்கிய சைவ சமயக் கோட்பாடுகள், ஆலயமும் வழிபாடும், நவக்கிரகங்கள் ஆகிய நான்கு அத்தியாயங்களையும், இரண்டாம் பகுதி சின்னங்களும் தத்துவங்களும் என்ற அத்தியாயத்தையும், மூன்றாம் பகுதி, தேவாரம் என்ற தனி அத்தியாயத்தையும், இறுதிப்பகுதி விரதம், பண்டிகைகள், சரணாகதி ஆகிய மூன்று அத்தியாயங்களையும் கொண்டதாக மொத்தம் ஒன்பது அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32135).