ஓர் அறிமுகம். ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சிவன்கோவில் அருகாமை, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, பெப்ரவரி 1987. (பளை: சிவ-அன்பன் க.குமாரசாமி, வேல் அழகன் பதிப்பகம், கண்டி வீதி). (8), 24 பக்கம், விலை: ரூபா 7.50, அளவு: 19×13 சமீ. இந்நூல் சைவ விரதங்களும் விழாக்களும், விரதங்கள் ஓர் ஆரம்ப விளக்கம், விரதங்கள் சில பொதுவான விதிமுறைகள், விரதங்கள் விழாக்கள் பண்டிகைகள், சைவ விரதங்கள் (வார விரதங்கள், விசேஷ வார விரதங்கள், பக்ஷ விரதங்கள், மாத விரதங்கள், வருஷ விரதங்கள், அபூர்வ விரதங்கள்) ஆகிய ஐந்து அத்தியாயத் தலைப்புகளின் கீழ் சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 042727).