14083 சைவ இலக்கியக் கதாமஞ்சரி.

கா.அருணாசல ஆசிரியர். நாவலப்பிட்டி: ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1959. (நாவலப்பிட்டி: ஆத்மஜோதி அச்சகம்). xiv, 254 பக்கம், விலை: ரூபா 3.00, அளவு: 18×12 சமீ. மட்டக்களப்பு, சைவப்புலவர், தேசிகமணி கா.அருணாசல ஆசிரியர் அவர்களினால் எழுதப்பட்ட இந்நூல் சைவக்களஞ்சியம் வரிசையில் ஐந்தாம் பாகமாக வெளிவந்துள்ளது. இதில் விநாயகருக்கு விகடசக்கரவிநாயகர் என்ற பெயருண்டானது எவ்வாறு என்ற முதலாவது கதையில் தொடங்கி நவவீரர் தோற்றம் என்ற 105ஆவது கதை வரையிலான அனைத்துக் கதைகளும் சைவசமயத்தைப் பயிலும் மாணவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ளும்வண்ணம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதையும் மூன்று முதல் நான்கு பக்கங்களுக்கு மேற்படாத வகையில், எளிதில் சலிப்பின்றிப் புரிந்துகொள்ளும் வண்ணம் எளிமையான நடையில் தேவைப்படின் ஒன்றிரண்டு செய்யுள்களுடன் சொல்லப்பட்டுள்ளன. பெரியபுராணம் தோன்றிய விதம், பிரமன் சிரம் கொய்தது, குண்டோதரனுக்கு அன்னமிட்டது, மன்மதனை எரித்தது, நாரைக்கு முத்தி கொடுத்தது என்றவாறாக இந்நூலிலுள்ள 105 கதைகளும் சுவையானவை. சைவசமயத்தின் பல்வேறு ஐதீக, வரலாற்று அம்சங்களையும் கூறி இறுதியில் ஒரு படிப்பினையையும் மாணவர்களுக்குச் சொல்கின்றது. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34341).

ஏனைய பதிவுகள்

12699 – தமிழர் அறிகையும் பரத நடனமும்.

சபா ஜெயராஜா. யாழ்ப்பாணம்: போஸ்கோ வெளியீடு, நல்லூர், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: போஸ்கோ ஆர்ட்ரோன்பிரிண்டர்ஸ்). (6), 69 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 100., அளவு: 20.5 x 14.5 சமீ.