14091 சந்நிதியான் ஆச்சிரமம்: சேவைகள் பணிகள்.

செ.மோகனதாஸ் (பதிப்பாசிரியர்). தொண்டைமானாறு: சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், ஸ்ரீ செல்வச்சந்நிதி, 1வது பதிப்பு, 2007. (தொண்டைமானாறு: அச்சகம், சந்நிதியான் ஆச்சிரமம்). 16+(56) பக்கம், புகைப்படங்கள், 56 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. சந்நிதியான் ஆச்சிரமம் தோற்றமும் வளர்ச்சியும் பணிகளும் (1988-2007 வரை), சைவ கலை பண்பாட்டுப் பேரவை, வைகாசிப் பெருவிழா, விசேட கௌரவிப்பு, அதிவிசேட கௌரவிப்பு, மயில்வாகனம் சுவாமிகள் குருபூசை, ஞானச்சுடர், 100ஆவது ஞானச் சுடர் வெளியீட்டு விபரம், ஆண்டுதோறும் வாசகர் போட்டி, மறைந்த முருகேசு சுவாமிகள் குருபூசை, அறுபத்து மூவர் குருபூசையும் மகேஸ்வர பூசையும் திருவாசக விழாவும், அருணகிரிநாதர் விழாவும், சமுதாயப்பணி, முன்பள்ளிப் பேரவை, சமூக சேவை-இலவச வைத்தியப் பணி, குடாநாடு தாண்டிய கல்விப் பணி, ஏனைய நிகழ்வுகள், நூல் வெளியீடு, கடல் அநர்த்தம், சுவாமிகளுக்கு வாழ்த்து, நன்றிக்குரியவர்கள், மக்கள் மனம் கவர்ந்த மகேஸ்வரன் ஆகிய குறுந்தலைப்புகளில் ஏராளமான புகைப்பட ஆவணங்களுடன் இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15117).

ஏனைய பதிவுகள்

12768 – மத்திய மாகாண தமிழ்மொழித் தின விழா மலர் 1993.

தமிழ் மொழித்தின விழா செயற்குழு. ஹட்டன்: மத்திய மாகாண தமிழ்மொழித்தின விழா செயற்குழு, 1வது பதிப்பு, ஜுலை 1993. (ஹட்டன்: யுனிவர்சல் பிரின்டர்ஸ்). (36) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 8