14101 இந்து தருமம் 1962-63.

வ.கணபதிப்பிள்ளை, கு.கல்வளை சேயோன் (இதழாசிரியர்கள்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1962. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (12), 1-84+1-40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ. இவ்விதழில் இந்து – இஸ்லாமிய கலாச்சாரத் தொடர்புகள் (எம்.ஏ.எம்.சுக்ரி), ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் நற்போதனை – யாழ்ப்பாணச் சமய நிலை, இறை உறையும் இடம் எதுவோ?-கவிதை (முத்து – சிவஞானம்), உபநிடத அறிவுரைகளும் சமய தத்துவங்களில் அவைதம் ஆதிக்கமும் (செல்வி சிவயோகம் பேரம்பலம்), இந்து சமயம் (க.நவரத்தினம்), ஸ்ரீ சுவாமி சிவானாந்தர்: ‘இந்து மதத்தின் பெருமை”, ‘இணையிலா இந்துமதம்” கலைஞன் மதம் (வை.அ.கைலாசநாதன்), தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (அ.சண்முகதாஸ்), முடிவு-கவிதை (சி.மௌனகுரு), இருபதாம் நூற்றாண்டில் சைவசமய நிலை (சுடர் மகேந்திரன்), மேதினியிற் காணவில்லை- கவிதை (வ.கோவிந்தபிள்ளை) ஆகிய கவிதைஃகட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தொடர்ந்து ‘சமயமும் பிற துறைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் இடம்பெறுகின்றது. சமயமும் சமுதாயமும் என்ற தலைப்பில் கா.சிவத்தம்பியும், சமயமும் கலைகளும் என்ற தலைப்பில் க.நவசோதியும், சமயமும் உளவியலும் என்ற தலைப்பில் எஸ். கனகசிங்கமும், சமயமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் ஸ்ரீமத் சுவாமி சச்சிதானந்தாஜீயம் தத்தமது கருத்துக்களை கட்டுரை உருவில் பதிவு செய்திருக் கிறார்கள். இறுதியாக ‘பேரரசும் பெருந்தத்துவமும்” என்ற தலைப்பில் க.கைலாசபதியின் சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. இரண்டாம் பகுதியாக 40 பக்கங்களில் பின்வரும் ஆங்கில ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. Hindu Dharma: Live Your religion, Saint Thayumanavar on Desire (S.Thananjayarajasingam), Hindu Civilization in the Gupta Period (S.Pathmanathan), The Pattini Cult in Ceylon (V.Muttu Cumaraswamy),Sri Ramakrishna and His Mission (P.Kanagaretnam),Maha Bharata has lost its character as an epic (S.Thiruganasampanthar),Hindu Temples of Ancient ceylon (Karthigesu Indrapala). (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008482

ஏனைய பதிவுகள்