க.ஜனநாயகம், இ.மகேஸ்வரன் (ஆசிரியர்கள்). கொழும்பு: இந்து சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194யு, பண்டாரநாயக்க மாவத்தை). (4), 90 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23.5×18.5 சமீ. இலங்கையில் சத்தியாக்கிரகப் போராட்டம் எழுச்சிமிக்கதொரு காலகட்டத்தில் இம்மலர் வெளியிடப்பட்டதால், ஆசிரியர் தலையங்கம் உள்ளிட்ட சில ஆக்கங்களும் தமிழுணர்வு கலந்ததாக உள்ளன. சுதந்திரன் அச்சகம் ஆட்சியாளர்களால் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அச்சிடப்பட்ட இம்மலர் வெளிவருவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. இம்மலரில் தேசிய கீதம் (தேசியக்கவிஞர் பரமஹம்ஸதாஸன்), ஸ்ரீ மகா சன்னிதானர் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமி அடிகள் அருளிய ஆசிச் செய்தி, அன்பு நெறியே சிவநெறி (ஆ.வி.மயில்வாகனம்), வாழ்த்துப்பா (திருமதி அ.கனகராயர்), சிவநெறி சிவதத்துவம் (சுவாமி சச்சிதானந்த யோகிராஜ்), சிவநெறி அல்லது சைவம் (கலைப்புலவர் க.நவரத்தினம்), பக்திக் கண்கள் (ஆ.கந்தையா), ஆன்ம லாபம் (நல்.முருகேச முதலியார்), தீண்டாமையும் கோவிலும் (க.திருஞானசுந்தரன்), இன்றைய இந்து இளைஞர்கள் (ரமா.சைதன்யர்), தமிழர் கோவில்களில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது? (ஈழவேந்தன்), வாழ்வின் குறிக்கோள் (க.சி.பேரின்பநாயகம்), விவேகானந்தர் (க.கணேசலிங்கம்), மாயாவாதம் (சி.கணபதிப்பிள்ளை), திருவாசகக் காட்சி (க.வேந்தனார்), கோவில்களில் களியாட்டங்கள் (செ.கிருஷ்ணமூர்த்தி), மெய்ப்பொருள் எங்கோ? (என்.மாணிக்க இடைக்காடர்), வேண்டுவது யாது? (அடியான்), கடவுள் வழிபாடு (க.மு.சி.சுந்தரராசா), மூவர் தமிழ் (க.கி.நடராஜன்), யார்கொலோ சதுரர் (செல்வி தனம் கணபதிப்பிள்ளை), சில யோசனைகள் (நடேஸ்), ஆலய வழிபாடு (கே.சி.இராசரத்தினம்), The Practice Of religion(Swami Vivekanada),Maha Sivrathiri Feast Of Feasts For The Saivaites(C.V.Rajendram),The Dance Of Siva (A.Viswalingam),Hindusium and its meaning for the west (Swami Budhananda),Saint Dakshinamurthi (T.Thillainathan),The Challenge of Times (S.Thangarajan),The Essential and the Non-Essentials in Religion (Kenneth Walker),Bakthi Markam (s.sabapathipillai), Tarmong in Diversity Wolfram H.koch), Brahmoins ancient Ceylon (C.S.Navaratnam)ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18250).