மலர்க்குழு. கொழும்பு 4: இலங்கை சின்மய மிஷன், 21/1, டி கிரெட்சர் பிளேஸ், இணை வெளியீடு, ரம்பொடை: ஸ்ரீ பக்த அனுமன் ஆலயம், வெவண்டன் மலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (16), 100 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ. இது உலகச் சின்மய இயக்க ஆன்மீகத் தலைவர் தவத்திரு பூஜ்ய குருஜி சுவாமி தேஜோமயானந்தா அவர்களினால் மேற்படி ஆலய மஹா கும்பாபிஷேக தினமான 08.04.2001 அன்று வெளியிட்டு வைக்கப்பெற்றது. இம்மலரில் ஆலயம் உருவான கதை (தெ.ஈஸ்வரன்), குருதேவரும் சின்மயானந்தரும் இலங்கைத் திருநாடும் (பத்மா சோமகாந்தன்), கூப்பிய கை (சக்திப்பெருமாள்), அஷ்ட பலன்கள் அருளும் அனுமன் (கீதா தெய்வசிகாமணி), தொண்டன் தலைவனானான் (ந.இராமலிங்கம்), கவிக்கு நாயகன் (சரஸ்வதி இராமநாதன்), உயிர் காத்த தொண்டன் (பூ.சொல்விளங்கும் பெருமாள்), யார்கொல் இச்சொல்லின் செல்வன் (க.சொக்கலிங்கம்), கம்பன் அனுமனைத் துதித்தது ஏன்? (மு.இராமசாமி), அனுமன்-தூதன்-தொண்டன்-தெய்வம் எனும் பரிணாமம் பற்றிய சில இலக்கியச் சிந்தனைகள் (கனகசபாபதி நாகேஸ்வரன்), கண்டேன் அனுமனை (க.சந்திரசேகரன்), கோயிலும் குடமுழுக்கும் (சி.தில்லைநாதன்), ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கண்ட இராமபிரான் (வி.சிவசாமி), மகா கும்பாபிஷேகக் கிரியைகள் (சோ.பாலசுப்பிரமணியக் குருக்கள்), ஆலய வழிபாடு (லலிதா நடராஜா), ஆலய வழிபாடும் ஆத்மீக வழிபாடும் (பார்பதி கண்மணிதாசன்), மலையகத்தில் ஆன்மீகம் (கே.வெள்ளைச்சாமி), கோயிற் கலைகள் (அ.சண்முகதாஸ்), இந்துமதம் அன்றும் இன்றும் (க.அருணாசலம்), இந்துசமயக் கல்வி மரபு (சோ.சந்திரசேகரன்), சமயமும் சமுதாயமும் (சாரதா நம்பிஆரூரன்), அனுமன் என்னும் அறிவுக்கடல் (எல்.கே.சுபாஸ்சந்திரபோஸ்), பக்தி போகிற பாதை (தென்கச்சி சுவாமிநாதன்), பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க (மு.பாரிவள்ளல்) ஆகிய படைப்பாக்கங்களும் விநாயகர் அகவல், ஸ்ரீ குருஸ்தோத்திரம், ஸ்ரீ லிங்காஷ்டகம், ஸ்ரீராம ஸ்தோத்திரம், ஸ்ரீ ஆஞ்சநேய நாமாவளிகள், ரம்பொடை பக்த ஆஞ்சநேயர், புகழ்மாலை, மங்கள ஸ்லோகங்களும் சாந்தி பாடல்களும் ஆகிய பக்தி இலக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் அ. 0139).