மலர்க்குழு. இடைக்காடு: ஆலய பரிபாலன சபை, அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2005. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). (6), viii, 84 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ. 22.04.2005 அன்று வெளியிடப்பட்ட இச்சிறப்பு மலரில், ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை தலைவர் அறிக்கை (வே.சுவாமிநாதன்), கண்ணகி அம்மன் பொங்கல் மரபு, கண்ணகி அம்மை திருஊஞ்சல் (நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர்), இடைக்காடு புவனேஸ்வரி கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மை பேரில் பாடப்பட்ட ஊஞ்சல் பாடல்கள் (சு.இராமசாமி), புவனேஸ்வரியம்மை திருவூஞ்சல் தீர்த்த உற்சவம் அன்று பாடப்படும் பாடல் (க.சோமசுந்தரப் புலவர்), தை அமாவாசையைப் பூரணையாக்கிய அபிராமிப் பட்டர், அபிராமிப்பட்டர் அருளிய அபிராமி அந்தாதி, ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் தோத்திரம், ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை, துக்க நிவாரண அஷ்டகம், தம்பாலை, இடைக்காடு, வளலாய் கிராமங்களிலுள்ள ஏனைய ஆலயங்கள் (தம்பாலை வெல்லன் அம்பலவாணர் சித்தி விநாயகர் ஆலயம் (குடாக்கட்டுப் பிள்ளையார் கோவில்), தம்பாலை ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், தம்பாலை அருள்மிகு ஸ்ரீ நாச்சிமார் ஆலயம், தம்பாலை வடுகன் நாவலடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், தம்பாலை புளியடி ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், இடைக்காடு அருள்மிகு பெரிய நாச்சியார் தேவஸ்தானம், இத்திக்கலட்டி (இலந்தைக் கலட்டி) ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், கொட்டடி அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம், வளலாய் நாகர் கோயில் பிள்ளையார் என வழங்கும் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயம், இடைக்காடு ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலயம், வளலாய் மண்திட்டி ஸ்ரீ ஞானவைரவர் கோயில், வளலாய் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், வளலாய் ஸ்ரீ ஞான வைரவர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு, இடைக்காடு ஸ்ரீ சோதி வைரவர் ஆலயம், நீர்ப்பெட்டி ஸ்ரீ வேலாயுத சுவாமி கோவில், கோணாவளை அன்னைமார் நாச்சிமார் ஆலயம் இடைக்காடு, வடகாட்டுப் புதுச் சந்நிதி ஆலயம், அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம் (முன்னீஸ்வரர் ஆலயம்), – தகவல்: திரு.க.அருணாசலம், திரு.வை.தம்பு, திரு.வே.சுவாமிநாதன், அருள்மிகு மாணிக்கப் பிள்ளையார் தேவஸ்தானம் இடைக்காடு, வளலாய் பெரிய நாகதம்பிரான் ஆலயம்), இடைக்காட்டு வள்ளிப்பிள்ளையின் அற்புதக் கதிர்காம யாத்திரை, தேசிக்காய் விளக்கின் சிறப்பு, இடைக்காடு ஸ்ரீபுவனேஸ்வரி அம்பாள் ஆலய தலபுராணம், தீராத வயிற்று நோயை நீக்கிய குலதெய்வம், எமது ஆலயம் பற்றிய சில விசேட குறிப்புகள், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தலபுராணம், கல்லுமாடும் புல்லுத் தின்னுமா? பெண்குழந்தையுடன் பிறந்த நாகதம்பிரான் (புளியம் பொக்கனை நாகதம்பிரான் தல வரலாறு), இடைக்காடு அருள்மிகு புவனேஸ்வரி அம்பாள் ஆலயம், இடைக்காடு புவனேஸ்வரி அம்பாள் ஆலய பரிபாலன சபை, பரிவார மூர்த்திகள் மற்றும் அவற்றுக்குரிய கோவில்களை அமைக்கவும், ஏனைய திருப்பணிகளுக்கும் உதவியவர்கள், அருள்மிகு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் நிலங்கள் சொத்துக்கள், நித்திய, நைமித்திய பூசைகளும் விழாக்களும் அவற்றின் உபயகாரர்களும், வருடாந்த மஹோற்சவ உபயகாரர்கள், ஸ்ரீ கண்ணகி அம்பாள் வருடாந்தப் பொங்கல் திருக்குளிர்த்தி விழா, உபயகாரர்கள், இடைக்காடு ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய வரைபட விபரம் ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26476).
Vicky Ventura Games Style And you will Thematic Construction
Posts Have a glimpse at the link: Slot Vicky Ventura Video game Opinion Find a situation Video game No-deposit Added bonus Very Unpredictable Online game