நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). x, 74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ. 2003 ஆம் ஆண்டில் மே மாதம் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இந்து சமய விவகார அமைச்சின் அனுசரணையுடன் நடத்தப்பெற்ற இரண்டாவது உலக இந்து மாநாட்டின் நினைவாக யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பெற்ற பிராந்தியச் சிறப்பு மலர். இதில் ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன் இந்துக் கோயிலின் அமைப்பு (அ.சண்முகதாஸ்), திருமந்திரம் காட்டும் மனிதநேயச் சிந்தனைகள் (மா.வேதநாதன்), மறு ஒழித்த இளம்பிறை (மனோன்மணி சண்முகதாஸ்), இந்து அறிவியல் வளர்ச்சியில் வானியலும் சோதிடமும்- சில சிந்தனைகள் (ப.கோபாலகிருஷ்ண ஐயர்), நம்பினோர் கெடுவதில்லை (க.சொக்கலிங்கம்), மிகு சைவத் துறை விளங்க (கோ.சி.வேலாயுதம்), ஈழத்தின் தமிழர் மத பண்பாட்டு விளக்கத்திற்கு (கார்த்திகேசு சிவத்தம்பி), நல்லூர்ப் பெரிய கோவில் (க. குணராசா), கந்தபுராணம் காட்டும் சைவசித்தாந்தம் (கலைவாணி இராமநாதன்), தடுக்கப்பட வேண்டிய மதமாற்றம் (ந.விஜயசுந்தரம்) ஆகிய பத்து சிறப்புக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14535).
No-deposit Free Spins & Bonuses Southern area Africa 2024
Posts Considerations once you prefer an internet casino – online casino no deposit bonus William Hill 200 free spins Try gambling no put coupons courtroom