14124 கொழும்பு-கொம்பனித்தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் தங்கத்தேர் மலர்.

வசந்தா வைத்தியநாதன் (மலர் ஆசிரியர்). கொழும்பு: தேர்த் திருப்பணிச் சபை, அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், கொம்பனித்தெரு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1998. (கொழும்பு: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு). (11), 12-86 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22.5 சமீ. 20.08.1998அன்று வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. 1832 ஆம் ஆண்டளவில் கொழும்பு புறக்கோட்டை டாம் வீதியில் ஒரு சிறிய கட்டிடமொன்றில் இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டது. பெரியதம்பி என்ற சைவப் பெரியாருக்குச் சொந்தமான காணியில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமான் இங்கு கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினார். அன்று கொழும்பு டாம் வீதியில் முதன் முதலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத முருகப் பெருமானின் திருவுருவச் சிலை 180 ஆண்டுகள் கடந்த பின் இன்றும் கொழும்பு கொம்பனித்தெருவில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் நடைபெற்ற யுத்தமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற இந்திய போர் வீரர்களும் தளபதி முதலானோரும் இவ்வாலயத்திற்கு வந்து பூசை வழிபாடு செய்து தாயகம் திரும்பியதாக கூறப்படுகிறது. அன்று ஆட்சிபுரிந்த அரசாங்கத்திற்கு இந்த ஆலயம் அமைந்திருந்த இடம் தேவைபட்டதால்ஆலயத்தை இடமாற்ற வேண்டிய நிலை தோன்றியது. அந்த காலகட்டத்தில் சைவத்தொண்டில் சிறப்புற்று விளங்கிய பெரியார் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களிடம் இடத்தை தெரிவு செய்து ஆலயத்தை அமைக்கும்படி அரசாங்கம் கோரியது. இதற்கமைய 1887 ஆம் ஆண்டு பெரியார் அருணாசலம் தற்போது ஆலயம் அமைந்திருக்கின்ற கொம்பனித்தெரு கியூ வீதி வளவில் இந்த ஆலயம் கட்டுவிக்கப்பட்டதாக வரலாறுகள் சான்று பகிர்கின்றன. சிறியதாக இருந்த இந்த ஆலயத்தை, சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் 1902 ஆம் ஆண்டு பெரியளவில் கட்டுவித்ததுடன் இவ்வாலயத்திற்கு ‘கொம்பனித்தெரு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்” என்ற திருநாமத்தையும் சூட்டினார். 1975 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி இவ்வாலயத்தில் புனராவர்த்தன அனாவர்த்தன மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின் ஆலயத்திற்கு 81 அடி உயரமும் 7 தளங்களும் கொண்ட இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி 1988 ஆகஸ்ட் 31 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இராஜகோபுர திருப்பணியின் மற்றொரு அம்சமாக கோபுரத்தின் இரு மருங்கிலும் மணிக்கோபுரமும் மணிக் கோபுரமும் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1991 மார்ச் 10 ஆம் திகதி அதற்கான அடிக்கல் நடப்பட்டது. அதனுடன் இணைந்த வகையில் ஆலயத்தில் புனருத்தாரண வேலைகளும் செய்யப்பட்டு 1993 மார்ச் 29 ஆம் திகதி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திற்கு ஒரு தங்கத்தேர் அமைக்க வேண்டும் என்ற ஆலய திருப்பணிச் சபையினரின் விருப்பத்திற்கு அமைய சிற்பாசாரியார் சரவணமுத்து ஜெயகாந்தன் தலைமையிலான சிற்பக் கலைஞர்களால் தங்கத் தேரொன்று உருவாக்கப்பட்டது. இதன் வெள்ளோட்ட விழா 1998 ஆகஸ்ட் 9 ஆம் திகதியன்று நடைபெற்றது. அதே ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் திகதியன்று நடந்தேறிய தேர் திருவிழாவின்போது முருகப் பெருமான் புதிய தங்கத்தேரில் ஆரோகணித்து வீதியுலா வந்தார். சிறந்த முருக பக்தரும், மாமன்ற அறங்காவலர் சபை உறுப்பினருமான திருக்குமார் நடேசன் தலைமையிலான தேர்த் திருப்பணிச் சபையினரதும், க. பாலசுப்பிரமணியம் போன்ற செயல் வீரர்களின் உதவியுடனும் தேர்த் திருப்பணி வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறியது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24708).

ஏனைய பதிவுகள்

Nfl norton’s coin Possibility

Blogs Chicago Bears At the The new The united kingdomt Patriots Odds And you may Traces Nfl Possibility And Develops Vegas Raiders Versus, Chicago Carries

Ægte Aldeles Colombian Kvinder

Content Amerikanske Kvinder Vs Europæiske Kvinder Topbyer Oven i købet At Stille Kroatiske Damer Ukrainiske Viver Tilbede Undtage er eg villig i tilgif at forkæle

Clopidogrel senza ricetta online

Clopidogrel senza ricetta online Quando va presa la cardioaspirina la mattina o la sera? È la prescrizione quando si ordina Clopidogrel 75 mg on-line? Quali