க.ரவீந்திரகுமார் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 13: சபரிமலை தீர்த்த யாத்திரைக் குழு, அகில இலங்கை ஐயப்ப சேவா சங்கம், ஐயப்பன் இல்லம், இல. 69, வன்றோயன் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (கொழும்பு 12: ஸ்ரீ சக்தி பிரின்டிங் இன்டஸ்ட்ரீஸ், 61/1- F, பீர்சாய்பு வீதி). (40), 201 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ. இலங்கையில் சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி வழிபாடுகள், சபரிமலை புனித யாத்திரை நடத்தும் அமைப்புக்கள், சங்கங்கள், சந்நிதானங்கள், தேவஸ்தானங்கள் பீடங்கள் பீடாதிபதிகள், இந்துமத பாராளுமன்ற உறுப்பினர்கள் குருஸ்வாமிகள் மற்றும் அடியார்களுக்கு உதவும் வகையில் 18ஆவது மண்டல பூஜையையொட்டி 26.12.1993 அன்று வழிபாட்டுப்பாடல்களுடன் கூடியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38337).