தேவஸ்தானத்தார். சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், கார்யகலாமந்திரம், 1வது பதிப்பு, ஜுலை 1963. (அச்சக விபரம் தரப்படவில்லை). (6) 87 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 5.00, அளவு: 25×19 சமீ. 01.07.1963 அன்று நடைபெற்ற முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா ஸமேத முன்னநாதஸ்வாமி தேவஸ்தான மஹா கும்பாபிஷேக வைபவத்தையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். கோவில் சார்ந்த புகைப்படங்களுடன், வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் கோவில் தொடர்பானதும், கும்பாபிஷேகப் பணிகள் தொடர்பானதுமான செய்தி அறிக்கைகளுடன் ஆன்மீக மணம் கமழ இம்மலர் வெளியிடப்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36366).