மங்கையர்க்கரசி மயில்வாகனம். கொழும்பு: அமரர் இரா.மயில்வாகனம் முதலாண்டு நினைவு வெளியீடு, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 12: லீலா பிரஸ், 182, மெசெஞ்சர் வீதி). (10), 71 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. ஆழ்ந்தகன்ற சைவசமயத்தின் மையக் கருத்துக்களையும் அச்சமயத்தின் தூண்களாக விளங்கக்கூடிய மெய்யடியார்களைக் குறித்தும், சமயசாதனை முறைகளைக் குறித்தும் இன்னும் சமயம் சார்ந்த பல கருத்துக்களையும் உள்ளடக்கிய 15 ஆன்மீகக் கட்டுரைகளை இந்நூல் கொண்டுள்ளது. மனித சாதிக்கு மதிப்பளித்த அன்பு மதம் சைவம், சிவனுள் சிவன், ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு, சும்மா இரு, ஞானம் பிறந்தது, நாம பஞ்சாட்சரம், தொண்டர் தம் பெருமை, மதுரபக்தியே சிறந்த பக்தி, துணையிலி பிண நெஞ்சே, குரு, சீரிய மனித வாழ்க்கைக்கு சமயத்தின் பங்களிப்பு, சொல், தெய்வத் திருக்குறள், தெய்வப்புலமை ஒளவை, ஞானக்கண் ஆகிய தலைப்புக்களில் இவை இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 23955).