கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 1வது பதிப்பு, மார்ச் 2010. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, கு.டு.1.14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). viii, 86 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 22ஒ15 சமீ., ISDN: 955-0134-74-1. முருகனின் கீர்த்தியை விளக்கும் இந்நூல், பல்வேறு கோணங்களில் நின்று பார்த்து முருகனின் திவ்யப் பெருங் கருணையை வெளிப்படுத்திநிற்கிறது. ஆறு திருமுகங்களையும் அழகிய பாணியில் விளக்குவதினூடாக சைவத் தத்துவார்த்த கருத்துகளை தெளிவாக விளக்கியிருக்கிறார். சிக்கலான சமயத் தத்துவங்களை கதைகளாக்கித் தரமுனையும் ஆசிரியரின் முயற்சியே இந்நூலாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48252).
14154 நல்லைக்குமரன் மலர் 2017.
நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xiv, 264 + (40) பக்கம், புகைப்படங்கள்,