14228 மகான்கள் அர்ச ;சனை மாலை.

க.இராமச்சந்திரன். கொழும்பு 4: அ.சீவரட்ணம், ஆனந்தசாகர, 42, சிறபறி காடின்ஸ், 2வது பதிப்பு, 2002, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). 102 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ. இந்த அர்ச்சனை மாலைகள் குறித்த சில மகான்களின் பிறந்ததின விழாக்களில் இறுதி வழிபாடாக பக்தி விஸ்வாசத்துடன் ஓதி அர்ப்பணஞ்செய்யப்பெற்றன. பக்தர் க.இராமச்சந்திரன் அவர்கள் தமது சொந்த சாதனைக்காக 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பெற்றவை. அவரது 76அவது அகவையின்போது கொழும்பு சத்சங்கத்தினர் 1972இல் முதலில் நினைவுமலராக இவற்றை தொகுத்து வெளியிட்டிருந்தனர். இந்த அர்ச்சனை மாலைகளில் குறித்த பெரியார்களின் வரலாற்றுச் சுருக்கமும் உபதேசங்களின் சாரமும் எளிய இனிய நடையில் அமைந்துள்ளன. இதில் திருவள்ளுவர், ஸ்ரீ இராமகிருஷ்ணர், அன்னை ஸ்ரீ சாரதாதேவி, சுவாமி விவேகானந்தர், யோகர் சுவாமிகள், ஸ்ரீ ரமண மஹரிஷி, சுவாமி இராமதாஸர், அன்னை கிருஷ்ணாபாய், சுவாமி சிவானந்தர் ஆகியோருக்கான அர்ச்சனை மாலைகள், நயினை நாகபூஷணி அம்பாள் பாடல், கதிர்காமத் திருப்பதிகம், தோத்திரங்கள், க.ராமச்சந்திரன் ஐயாவைப் பற்றி மகான்கள், பெரியார்கள் புகழ்ந்து எழுதிய பாக்கள், கட்டுரைகள், முக்கிய கடிதங்கள் முதலியவற்றையும் சேர்த்து வெளியிட்டுள்ளனர். இந்நூல் அன்னை கிருஷ்ணாபாய் அவர்களது 99ஆவது பிறந்ததினமாகிய 06.10.2002 அன்று வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28164).

ஏனைய பதிவுகள்

Online slots games

Content Genesis Gambling enterprise Review – Required User for 2024 Examining Casino games How to locate The best Web based casinos – Short Tips Most