14233 மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணம், திருப்பள்ளியெழுச்சி,திருவம்பாவை.

திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 24 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 18.5×12.5 சமீ. சைவ சமயம் அநாதியானது. பரம்பொருளான சிவன் சிவசக்தி சொரூபனாகவும் சிவகாமி சுந்தரனாகவும் விளங்குகின்றார். மாதங்களில் சிறந்த ஞான மாதமாக மார்கழி கருதப்படுகின்றது. இம்மாதத்தில் வருகின்ற மார்கழித் திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, விநாயகர் சஷ்டி விரதம்ஆகிய விரதங்கள் மூலம் சைவநெறிமுறை மனித வாழ்வை மேம்படுத்தி முத்திக்கு இட்டுச் செல்கின்றது.சிவ விரதங்கள் பல உள்ளன. மார்கழித் திருவெம்பாவை மிகவும் சிறப்புப் பெற்றது. மார்கழி மாதத்தின் திருவாதிரை நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு பத்து நாட்கள் திருவெம்பாவை விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. திருவெம்பாவை என்றதும் சிவபிரானால் ஆட்கொள்ளப்பட்ட ஞானமுத்தர் மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, சிவபுராணம் என்பன முக்கியப்படுத்தப்படுகின்றன. இந்நூலில் இம்மூன்று பக்தி இலக்கியங்களும் பக்தர்களின் தேவைகருதி விரிவுரைகளுடன் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. இந்நூலாசிரியர் சுழிபுரம் யாழ்ஃவிக்டோரியாக் கல்லூரியின் ஆசிரியராவார்.

ஏனைய பதிவுகள்