வேல் சுவாமிநாதன், அருள் சுவாமிநாதன் (தொகுப்பாசிரியர்கள்). அச்சுவேலி: இடைக்காடு இந்துநெறிக் கழகம், இடைக்காடு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). எiii, 190 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. யாழ்ப்பாணம், அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த இடைக்காடு இந்து நெறிக் கழகத்தினரின் 16ஆவது ஆன்மீக வெளியீடாகிய இந்நூலை இடைக்காடு வே.சுவாமிநாதன் தம்பதியினர் இணைந்து தொகுத்துள்ளனர். கந்தர்சஷ்டி கவசம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தரலங்காரம், திருமுருகாற்றுப்படை வெண்பாக்கள், முருகன் பஜனாவளி, ஆறுமுகசாமி விருத்தம், அவிநாசிப் பத்து, முருகன் தோத்திரப் பாடல்கள், கச்சியப்பரும் கந்தபுராணமும், ஆயிரம் பக்தர்களை மீட்ட முருகாற்றுப்படை, கோபுரத்திலிருந்து குதித்த அருணகிரியை ஏந்திய முருகவேள், பாலன் தேவராச சுவாமிகள் வரலாற்றுச் சுருக்கம், திருமுருகன் வரலாறு, ஆறுபடை வீடுகள், கதிர்காமக் கந்தன், நல்லூர் முருகன், மாவிட்டபுரம் ஆறுமுகன்,தொண்டைமானாறு ஆற்றங்கரைச் சந்நிதியான், மண்டூர்க் கந்தன், முருகன் புகழ்கூறும் செய்திகள், கந்தபுராணம் கூறும் தத்துவம், ஞானவேல், முருகப் பெருமானின் தேவியர்கள், முருகப் பெருமானின் திருநாமங்கள், முருகப் பெருமானின் வாகனங்கள், இடும்பாசுரன் இன்றேல் எமக்கேது காவடி, சூரசங்காரம், கந்தனுக்குரிய முக்கிய விரதங்கள், பலாக்கனியைக் கவர்ந்திழுத்த கதிர்காமக் கந்தன், ஆற்றில் இறந்தவனுக்கு உயிர் கொடுத்த ஆற்றங்கரையான், துண்டித்த கையைப் பூரணமாக்கிய பரங்குன்ற முருகன், வீரபாண்டிய கட்டபொம்மனை மன்னிப்புக் கேட்கவைத்த திருச்செந்தூர் முருகன், மயில்வாகனனின் மயில்கள் எத்தனை விதம்?, ஆற்றுப்படை வீடுகள் முருகனின் ஆறுபடை வீடுகள் ஆனது, சுவாமிநாதர், உசாத்துணை நூல்கள், தென்னிந்திய திருத்தல யாத்திரைத் துணைவன், முருகன் தமிழ் அர்ச்சனை ஆகிய 44 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20848).