14255 பனுவல்: சமூக பண்பாட்டு விசாரணை (இதழ் 1-2003).

கசங்க பெரேரா, தா.சனாதனன் (பிரதான தொகுப்பாசிரியர்கள்). கொழும்பு 8: சமூக பண்பாட்டு விசாரணைக்கான கூட்டிணைப்பு, சமூக, பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கொழும்பு நிறுவனம், 119யு, கிங்ஸ் வீதி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரிண்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி). (4), 155 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISDN: 1391-9156. இவ்விதழில், முன்னுரை (பனுவல் ஆசிரியர் குழு), அடையாளத்தின் கட்டமைப்பு முறைகள் அரசியல், நடை, குழப்பம் (மூலம்: சசங்க பெரேரா, தமிழில்: தா.சனாதனன்), வர்த்தகர்களின் கடவுளாக முருகக் கடவுள் (கதரகம தெய்யோ): சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி – (டெஸ்மண்ட் மல்லிகாராச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்), புராதன காலத்தில் இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்குமிடையில் நிலவிய கலாச்சார மற்றும் வணிகத்தொடர்புகள் பற்றிய புதிய சான்றுகள் (ஒஸ்மண்ட் போபெ ஆரச்சி, தமிழில்: சாமிநாதன் விமல்), குடும்பத்தின் பாணி இலங்கையில் வன்முறையும், கலையும் தொடர்பான ஒர் ஆய்வு (ஷெரன் பெல், தமிழில்: சாமிநாதன் விமல்), மொழிக்குறியின் இயல்பு (வெடினன் சசூர், தமிழில்: இ.முருகையன்), பனுவல் நூல் திறனாய்வு: இலங்கைத் தமிழர் தேசவழமைகளும், சமூகவழமைகளும் – சி.பத்மநாதன் (கே.ரி. கணேசலிங்கம்), தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் பண்டைய கால மதமும், கலையும் – பரமு.புஷ்பரட்ணம் (பாக்கியநாதன் அகிலன்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 32884).

ஏனைய பதிவுகள்

14093 திருக்கோணேஸ்வரம்.

வை.சோமாஸ்கந்தர், அ.ஸ்ரீஸ்கந்தராசா. திருக்கோணமலை: பொ.கந்தையா, தனசக்தி, 1வது பதிப்பு, ஏப்ரல் 1963. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி). xi, 100 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 1.75, அளவு: 18×13