களுவாஞ்சிக்குடி: ம.சிவநேசம், சிவாபவனம், சிவன்கோவிலவீதி, செட்டிபாளையம், 1வது பதிப்பு, ஆவணி 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xx, 347 பக்கம், விலை: ரூபா 600.00, அளவு: 21×14.5 சமீ. இலங்கையில் மனித உரிமைகளின் வளர்ச்சியும் வரலாற்றில் இனத்துவ பண்பியலும் சமூக மாற்றமும் சமூக பொருளாதார அபிவிருத்தி நிலைகள் பற்றிய செயல்களின் வளர்ச்சி/ இலங்கையில் மனித உரிமைகளுக்கான சட்ட பிரகடனங்கள்/ மூன்றாம் உலகநாடுகளில் இன்று காணப்படும் புலம்பெயர்ந்த இந்திய சமூகங்களின் மனித உரிமைகளும் படிமுறை வளர்ச்சியும்/ தெற்காசிய, தென்கிழக்காசிய தென் ஆபிரிக்க நாடுகளில் மனித உரிமைகள்/ சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டப் பிரகடனங்களும் இனத்துவ மேலாண்மை பிரயோகமும்/ சர்வதேச அரசியல் சட்ட மேலாண்மையில் இலங்கை சிறுபான்மையினரின் சுயநிர்ணய உரிமை/ உலக விவகாரங்களில் இன்றைய நிகழ்வுகள்/ சர்வதேச அரசியல் முறையும் அரசியல் சட்ட வலுவும்/ சட்டத்தின் உயர்நிலையும் நல்லாட்சி செயல் முறையும்ஃ இலங்கையில் அரசியல் கொள்கை உருவாக்குவதில் சட்டவலு கொண்டஅரசியல் பங்கேற்புகளில் சமூகம் பங்குபற்றுதல் இன்றியமையாதது/ மனித உரிமையின் தன்மையும் போராட்டங்களின் ஊற்றுகையும் தீர்வும்/ Minority Politics Law Rights Identity in Sri Lanka, ஆகிய பன்னிரு இயல்களில் இந்நூல் எழுதப் பட்டுள்ளது. இந்நூலாசிரியர் சிவத்திரு வை.விவேகானந்தன், மனித உரிமைகள் நிறுவனத்தின் மனித உரிமை கற்கைநெறி உயர்கல்வி இணைப்பாளராகவும், பத்தன, -ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34797).