14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×17.5 சமீ., ISBN: 955-8270-18-0. SIDA: எனப்படும் சுவீடன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள சிறு நூல். ‘பெயரையும் நாட்டினத்தையும் பெறுவதற்குள்ள உரிமை” என்ற பதாதையின்கீழ் சிறுவர் உரிமைகள் பற்றிய கருத்தியலை சிறுவர்களுக்கு விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பதினைந்து நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந்நூல்களை சிபில் மாமி, சர்வோதய மாமா, சர்வோதய மாமி என பல்வேறு பாத்திரங்கள் வழங்கியுள்ளன. ‘நாங்கள் யார்” என்ற இந் நூலின் பாத்திரங்களாக தெருவில் அலையும் ஒரு நாய்க்குட்டியும் வீடு வாசலற்ற ஓர் அநாதைச் சிறுமியுமாவர். இவர்களுக்கிடையேயான உரையாடலே இந் நூலின் பிரதான அம்சமாகும். இவ்விரு பாத்திரங்களுக்குமிடையே உள்ள பொதுப் பண்பானது இரண்டு பேருக்கும் உறவுகள் என்று எவருமில்லை, அவர்களுக்கென்றுதனியான பெயரும் இல்லை. இந்த அடிப்படையில் மனித உரிமைகள் பற்றிய கருத்தை இவ்விரு பாத்திரங்களிடையேயான உரையாடல்வழியாக சிறுவர்களிடையே விதைப்பதை இந்நூல் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்