14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×17.5 சமீ., ISBN: 955-8270-18-0. SIDA: எனப்படும் சுவீடன் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டுள்ள சிறு நூல். ‘பெயரையும் நாட்டினத்தையும் பெறுவதற்குள்ள உரிமை” என்ற பதாதையின்கீழ் சிறுவர் உரிமைகள் பற்றிய கருத்தியலை சிறுவர்களுக்கு விளக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பதினைந்து நூல்களில் இதுவும் ஒன்றாகும். இந்நூல்களை சிபில் மாமி, சர்வோதய மாமா, சர்வோதய மாமி என பல்வேறு பாத்திரங்கள் வழங்கியுள்ளன. ‘நாங்கள் யார்” என்ற இந் நூலின் பாத்திரங்களாக தெருவில் அலையும் ஒரு நாய்க்குட்டியும் வீடு வாசலற்ற ஓர் அநாதைச் சிறுமியுமாவர். இவர்களுக்கிடையேயான உரையாடலே இந் நூலின் பிரதான அம்சமாகும். இவ்விரு பாத்திரங்களுக்குமிடையே உள்ள பொதுப் பண்பானது இரண்டு பேருக்கும் உறவுகள் என்று எவருமில்லை, அவர்களுக்கென்றுதனியான பெயரும் இல்லை. இந்த அடிப்படையில் மனித உரிமைகள் பற்றிய கருத்தை இவ்விரு பாத்திரங்களிடையேயான உரையாடல்வழியாக சிறுவர்களிடையே விதைப்பதை இந்நூல் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14940 நினைவழியா ஓராண்டு (An Unforgettable Year) வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

மலைஅரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலைஅரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, பெப்ரவரி 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). vi,

14363 மலைத்தென்றல் சிறப்பு மலர்- 2015.

கஜானன் கணேசமூர்த்தி (இதழாசிரியர்). பதுளை: ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (யாழ்ப்பாணம்: தேவி பிரின்டர்ஸ், 140/1, மானிப்பாய் வீதி). x, 182 பக்கம், புகைப்படங்கள், விலை:

14945 நாடகக் கலைஞர் ஏ.ரி.பொன்னுத்துரை: வெள்ளிவிழா மலர்-1974.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). தெல்லிப்பழை: குரும்பசிட்டி சன்மார்க்க சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). ஒஒiஎ, 52 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. பதிப்புரை (பண்டிதர் சி.கணபதிப்பிள்ளை),

14193 கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்) நால்வர் வழிபாடு.

செ.இரத்தினப்பிரகாசம் (பதிப்பாசிரியர்). கொக்குவில்: கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் (புதுக்கோவில்), 1வது பதிப்பு, நவம்பர் 2003. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xviii, 94 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு:

12285 – அமைதியான சமாதானத் தூதுவர்: ஆசிரியர்களுக்குச் சமர்ப்பணம்.

எஸ்.சந்திரசேகரம் (தொகுப்பாசிரியர்), பீ.எஸ்.சர்மா (தமிழாக்கம்). பத்தரமுல்ல: ஸ்ரீலங்கா யுனெஸ்கோ தேசிய சபை, இசுருபாய, 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம். 21 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×24.5 சமீ.