14287 மனித உரிமைகளைஉறுதிப்படுத்தும் பொறிமுறைகள்.

மேனகா ஹேரத், க.கபிலன் வில்லவராஜன். கொழும்பு 8: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 165, கின்சி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 9: மெனிக் அச்சகம், 161, தெமட்டகொட வீதி). iv, 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISDN: 978-955- 8929-20-9. மனித உரிமைகள் பொறிமுறைகள் தொடர்பான அம்சங்களைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் வெளியிடப்பட்டுள்ள சிறு பிரசுரம் இது. ‘சர்வதேச பொறிமுறை” (பட்டய அடிப்படையிலான மனித உரிமை பொறிமுறைகள், உடன்படிக்கை அடிப்படையிலான மனித உரிமை பொறிமுறைகள், ஏனைய சர்வதேச பொறி முறைகள்), ‘பிராந்திய மனித உரிமை பொறிமுறைகள்”, ‘தேசிய மனித உரிமை பொறிமுறைகள்” (அடிப்படை உரிமை அடிப்படையிலான பொறிமுறைகள், ஏனைய மனித உரிமை பொறிமுறைகள்) ஆகிய மூன்று பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் தொடர்பு விபரங்கள், தேசிய மனித உரிமை அமைப்புகளின் விபரங்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் தொடர்புகொள்ளும் வழிமுறைகள் என்பன இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

14005 கணினி வழிகாட்டி: 5.

வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, மே 2003. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). 48 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98004-3-4.