14304 நீரும் மீனும். திருச்செல்வம் தவரத்தினம்.

காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (சுன்னாகம்: ஆரணன் பதிப்பகம், மருதனார்மடம்). (4), 40 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 24×17.5 சமீ., ISDN: 978-955-38483-6-9. ஆரம்பக் கல்வி – இடைநிலை மாணவருக்கான அரசின் பாடத்திட்டத்திற்கு அமைவாகத் தயாரிக்கப்பட்டுள்ள நூல். இதில் நீரின் மகத்துவம், நீரின் விசேட இயல்புகள், நீர் தூய்மையாக்கும் வழிகள், நீர் மாசடையும் முறைகள், நீர் மாசடைவதால் ஏற்படும் நோய்களும் பாதிப்புக்களும், நகரங்களில் நீர் விநியோகம், மழைவீழ்ச்சி, நீரில் சேரும் ஆபத்தான பார உலோகங்கள், நீர் அருந்தாமையால் ஏற்படும் உடல் பாதிப்புகள், நீர் பற்றிய பாரம்பரிய அறிவுத் தேவைப் பயன்பாடுகள், நீரின் விஞ்ஞானக் கட்டமைப்பு, நீர் நிலைகளின் அமைவுகள், மீன்கள் அறிமுகம், அலங்கார மீன் வளர்ப்பு, உணவுக்கான மீன் வளர்ப்பு, மீன்பிடி ஆகிய 16 பாடத் தலைப்புகளின்கீழ் இந்நூலில் நீர்வளம் பற்றியும் மீன்வளம் பற்றியும் ஆரம்ப அறிவுத் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்